Saturday, 27 April 2013


1. குடவோலை முறையை ஏற்படுத்தியவர்கள் - சோழர்கள்
2. குடவோலை முறையை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு - உத்திரமேரூர் கல்வெட்டு
3. இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை - 7
4. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் இட ஒதுக்கீடு - 1/3 பாகம்
5. மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை - 10 
லட்சத்திற்கு மேல் இருக்க வேண்டும்.
6. இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பை ஏற்படுத்தியவர் - ரிப்பன் பிரபு
7. கிராம உள்ளாட்சியில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை - மூன்று
8. மக்களாட்சிக்கு அடித்தளமாக இருப்பது - கிராம சபை
9. இரண்டு மாவட்டங்கள் மட்டுமே உள்ள மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் - அந்தமான் நிக்கோபார் தீவுகள்
10. ஊராட்சி மன்றத்தில் வார்டு உறுப்பினர்களின் பதவிக் காலம்  - 5 ஆண்டுகள்
11. தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை - 10
12. தனி அரசியல் அமைப்பு கொண்ட இந்திய மாநிலம் - ஜம்மு மற்றும் காஷ்மீர்
13. இந்தியாவின் மொத்த சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை - 4052
14.  மியான்மர் என்ற நாட்டின் பழைய பெயர் - பர்மா
15. இந்திய அரசியல் அமைப்பிற்கு முகப்புரை வழங்கியவர் - ஜவஹர்லால் நேரு
16. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் - இராஜேந்திர பிரசாத்
17. இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவர் -  டாக்டர் இராதாகிருஷ்ணன்
18. இந்தியாவின் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - கமல்தேவி சட்டோபாத்தியா
19.இந்தியாவில் தேர்தலில் முதன் முதலில் பெண்கள் வாக்களித்த ஆணடு - 1950
20. பெண்கள் நாடாளுமன்றத்துக்கு முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு - 1952
21. சார்க் என்பதன் விரிவாககம் - தெற்காசிய நாடுகளின் மண்டலக் கூட்டமைப்பு
22. கோட்டைகள் அதிகம் உள்ள நாடு - செக்கோஸ்லோவேகியா
23. கன்னிமாரா நூலகம் முதன் முதலில் துவக்கப்பட்ட இடம் - புனித ஜார்ஜ் கோட்டை
24. இந்தியாவின் முதல் நவீன நூலகம் - கன்னிமாரா நூலகம்
25. சிப்பாய் கலகம் ஏற்பட்ட நாள் - 10.07.1806
26. வேலூர் கோட்டையை கட்டிய சிற்பி - பத்ரிகாசி இமாம்
27. இத்தாலியின் இராணுவக் கோட்டை வடிவமைப்பில் அமைந்துள்ள கோட்டை - வேலூர் கோட்டை
28. வேலூர் கோட்டையை கட்டியவர்சின்ன பொம்மன் நாயக்கன்
29. இந்தியாவின் மிக உயர்ந்த கொடிக்கம்பம் அமைந்துள்ள இடம் - புனித ஜார்ஜ் கோட்டை
30. புனித ஜார்ஜ் கோட்டையை கட்ட ஆங்கிலேயருக்கு இடம் அளித்தவர் - சென்னியப்ப நாயக்கர்
31. புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியவர் - சர் பிரான்சிஸ் டே
32. புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு - 1639
33. வேலூர் புரட்சியின் 200வது ஆண்டு  தினம் கொண்டாடப்பட்ட ஆண்டு - 2006
34. தரங்கம்பாடி கோட்டையைக் கட்டியவர்கள்-டென்மார்க் நாட்டவர்
35. அச்சு இயந்திரத்தை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தவர் - சீகன்பால்கு
36. தரங்கம்பாடி கோட்டை கட்டப்பட்ட ஆண்டு - 1620
37. புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடம் - சென்னை
38. சிங்கபுர நாடு என்று அழைக்கப்பட்ட பகுதி - செஞ்ஜி
39. போக்குவரத்து விதிகளில் சிவப்பு முக்கோணம் குறிப்பிடுவது - செல்லாதே
40. போக்குவரத்து விதிகளில் நீலச் செவ்வகம் குறிப்பிடுவது - தகவல் சின்னங்கள்
41. கிழக்கின் ட்ராய் என்று அழைக்கப்பட்ட கோட்டை - செஞ்சிக் கோட்டை
42. போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு எத்தனை வயது வரை தர வேண்டும் - 5
43. செஞ்சிக் கோட்டை அமைந்துள் மலை - கிருஷ்ணகிரி
44. தமிழ்நாட்டின் மொத்த மாவட்டங்கள் - 32
45. தமிழ்நாட்டில் குறிஞ்சி மலர் எங்கு மலர்கிறது - நீலகிரி மலை
46. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் - கடலூர்புதுக்கோட்டைநாகப்பட்டினம்
47. மேகாலயாவின் தலைநகரம் - ஷில்லாங்
48. பாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம் - இராமநாதபுரம்
49. இந்தியாவின் மிகப்பெரிய அணைக்கட்டு - பக்ரா நங்கல்
50. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி

tnpsc t



கவிஞர் ஆலந்தூர் கோ . மோகனரங்கம் 1-6-1942 இல் சென்னையை அடுத்த ஆலந்தூரில் பிறந்தார். இவர் பெற்றோர் ம. கோபால் ; கோ மீனாம்பாள்

இவர் எண்ணற்ற இசைப் பாடல்களையும் கவிதை நாடகங்களையும் படைத்துள்ளார் இவருடைய “இமயம் எங்கள் காலடியில்” என்னும் கவிதைத் தொகுப்பு நூல் தமிழக அரசின் பரிசினை பெற்று உள்ளது



அகநானூறு 

* அகம் + நான்கு + நூறு = அகநானூறு

* 13 அடிச் சிறுமையும் 31 அடி பெருமையும் கொண்ட அகப்பொருள் சார்ந்த நானூறு அகவற்பாக்களால் தொகுக்கப்பெற்ற தொகை நூலாகும்

* பல்வேறு காலங்களில் புலவர் பலரால் இயற்றப்பெற்றது

* மதுரை உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மரால் தொகுக்கப்பட்டது

* இந்நூலை தொகுப்பித்தவன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியாவான்

* இந்நூலுக்கு ‘நெடுந்தொகை’ என்னும் பெயரும் உண்டு

* அகநானூறு மூன்று பகுதிகளாக உள்ளது முதல் 120 பாட்டுகள் ‘களிற்றியானை நிரை’ அடுத்த 180 பாட்டுகள் ‘மணிமிடை பவளம்’ கடைசி 100 பாட்டுகள் ‘நித்திலக்கோவை’ எனப்படும்

* இந்நூலில்
1, 3 என ஒற்றைப்படை எண்களாக வருவன பாலை திணைப் பாடல்களாகவும்
2, 8 என வருவன குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும்
4, 14 என வருவன முல்லை திணைப் பாடல்களாகவும்
6, 16 என வருவன மருதத் திணைப் பாடல்களாகவும்
10, 20 என வருவன நெய்தல் திணைப் பாடல்களாகவும் 


“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ(று)
ஓத்த பதிற்றுபத்(து) ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோ(டு) அகம்புறம் என்(று)
இத்திறத்த எட்டுத் தொகை”

என்னும் பழம் பாடல் எட்டுத் தொகை நூல்களைச் சுட்டுகின்றது இவற்றுள் பதிற்றுபத்தும் புறநானூறும் புறப்பொருள் பற்றிய நூல்களாகும். பரிபாடல் அகப்புறப் பாடல்களை கொண்ட நூல். எஞ்சியவை அகப்பொருள் நூல்களாகும்


இந்தியத் தலைவர்களின் முக்கிய சமாதிகள்:
------------------------------------------------------------
மகாத்மா காந்தி சமாதி - ராஜ்காட்
மொரார்ஜி தேசாய் சமாதி - அபய்காட்
குல்சாரிலால் நந்தா சமாதி - நாராயண்காட்
லால்பகதூர் சாஸ்திரி சமாதி - விஜய்கா


நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்தி பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்டபின் அகிம்சை ஒன்றினால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்

tnpsc tamil

தேத்தங்கால் கண்மாய் - பறவைகள் சரணாலயம ...........................உள்ளது


மாநிலத்தின் மொத்த குடும்பங்களும் குடும்பத்தில் ஒருவராவது வங்கிக் கணக்கு வைத்துள்ள நாட்டின் முதல் மாநிலம்


பகுதி 1 (ஷரத்து 1-4) 
இந்திய யூனியன் பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை.

பகுதி 2 (ஷரத்து 5-11) 
இந்திய குடியுரிமை பற்றியது.

பகுதி 3 (ஷரத்து 12-35)
அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள்.

பகுதி 4 (ஷரத்து 36-51)
அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.

பகுதி 5 ( ஷரத்து 51 A)
அடிப்படை கடமைகள்.

பகுதி 6 (ஷரத்து 52- 151)
மத்திய அரசமைப்பு அதாவது குடியரசு தலைவர், து. குடியரசு தலைவர், அமைச்சரவை, பாராளுமன்றம் அதன் அமைப்பு. உச்சநீதி மன்றம் அதன் அமைபு.

பகுதி 6( ஷரத்து 152-237)
மாநில அரசமைப்பு, கவர்னர், மாநில அமைச்சரவை. மாநில சட்டமன்றம் / சட்ட மேலவை அதன் அமைப்பு உயர் நீதி மன்றம் அதன் அமைப்பு.

பகுதி 7 (ஷரத்து 238)
அரசமைப்பு சட்டம் முதல் ஷெட்யூலில் உள்ள மாநிலங்கள் பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப் பட்டுள்ளது.

பகுதி 8 (ஷரத்து 239 -242)
மத்திய யூனியன் பிரதேசம் குறித்து.

பகுதி 9 ( ஷரத்து 243)
உள்ளாட்சி நிர்வாகம் இந்த ஷரத்தில் இருக்கும் உட் பிரிவுகள் ஏராளம்.

பகுதி 10 ஷரத்து 244
THE SCHEDULED AND TRIBAL AREAS.

பகுதி 11 (ஷரத்து 245-263)
மத்திய மாநில அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு.

பகுதி 12 (ஷரத்து 264-300)
அரசின் நிதி குறித்த ஷரத்துக்ள் நிதி / நிதியினைக் கையாளும் நெறிகள்.

பகுதி 12( ஷரத்து 301- 307)
இந்திய நாட்டில் வணிகம் செய்யும் நடமுறைக்கான ஷரத்துகள்.

பகுதி 13( ஷரத்து 308-323)
அரசுப் பணி.

பகுதி 14 (ஷரத்து 324ஏ மற்றும் 323 பி)
மத்திய தீர்ப்பாயங்கள்.

பகுதி 15 (ஷரத்து 324-329)
தேர்தல்கள், தேர்தல் கமிஷன்.

பகுதி 16 (ஷரத்து 330-342)
ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்தியர் ஆகியோர் குறித்து.

பகுதி 17 (ஷரத்து 343-351)
மொழி(சினிமா இல்ல) தேசிய மொழி, வட்டார மொழி, நீதி மன்றங்களில் மொழி.

பகுதி 18 (ஷரத்து 352-360)
அவசர நிலைக்கானது(எமெர்ஜென்சி)

பகுதி 19 (ஷரத்து 361-367)
இதர ( இதில் குடியரசு தலைவர், கவர்னர் இந்தப் பதவிக்கான சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில)

பகுதி 20 (ஷரத்து 368)
இந்திய் அரசமைப்புச் சட்டம் திருத்தம் அதற்கான நடைமுறை.

பகுதி 21 (ஷரத்து 369-392)
TEMPORARY, TRANSITIONAL AND SPECIAL PROVISIONS அதாவது சில நேரத்தில் மாநில அரசின் நிர்வாகப் பொறுப்பிலும் அதே நேரம் மத்திய அரசும் அந்தப் பொருளில் சட்டமியற்ற வழி செய்யும் concurrent list குறித்த நெறிகள்.

பகுதி 22 (ஷரத்து 392-395)
SHORT TITLE, COMMENCEMENT, AUTHORITATIVE TEXT IN HINDI AND REPEALS


நா.பார்த்தசாரதி (டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் புதின (நாவல்) எழுத்தாளர் ஆவார்.

புனைப்பெயர்
தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும்

*இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற புதினங்களான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது.

*தமிழ்நாடு, விருதுநகர் மாவட்டம் , சிவகாசி வட்டத்தில் உள்ள நரிக்குடி இவரது பிறந்த ஊர். சராசரி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். பாரதியார் ஆசிரியராய் இருந்த மதுரை சேதுபதிப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றினார்.

*முறையாகத் தமிழ் கற்றவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து அந்தக் கால முறைப்படி இலக்கணச் சூத்திரங்களை மனப்பாடம் செய்து கல்வி கற்றவர்.

*கல்கி இதழின் ஆசிரியர் சதாசிவத்தின் அழைப்பின் பேரில் அதன் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். கல்கியில் சேர்ந்து அவர் எழுதிய முதல் புதினம், குறிஞ்சி மலர்.

*1965 இல் கல்கி இதழில் இருந்து விலகி சொந்தமாக தீபம் என்ற மாத இதழை ஆரம்பித்தார். ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் இருந்து 23 ஆண்டுகள் அதை நடத்தினார்.

*1979ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தினமணிக் கதிர் வார இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினார்.

*சாயங்கால மேகங்கள், நிசப்த சங்கீதம், இராணி மங்கம்மாள் போன்ற நாவல்களை தினமணிக்கதிரில் எழுதினார். கதிரிலிருந்து விலகிய பின் பத்திரிகை உலகத்தைப் பின்புலமாக வைத்து சுந்தரக் கனவுகள் என்கிற தலைப்பில் ஒரு புதினம்
எழுதினார்.

நா.பார்த்தசாரதியின் புதினங்கள்

1.கபாடபுரம்
2.சாயங்கால மேகங்கள்
3.மணிபல்லவம்
4.ஆன்மாவின் ராகங்கள்
5.குறிஞ்சி மலர்
6.பொன் விலங்கு
7.சாயங்கால மேகங்கள்
8.நிசப்த சங்கீதம்
9.ராணி மங்கம்மாள்
10.சமுதாய வீதி
11.துளசி மாடம்
12.பாண்டிமாதேவி
13.நித்திலவல்லி
14.வஞ்சிமாநகரம்
15.சத்தியவெள்ளம்
16.வெற்றி முழக்கம்