Saturday, 27 April 2013

tnpsc t



கவிஞர் ஆலந்தூர் கோ . மோகனரங்கம் 1-6-1942 இல் சென்னையை அடுத்த ஆலந்தூரில் பிறந்தார். இவர் பெற்றோர் ம. கோபால் ; கோ மீனாம்பாள்

இவர் எண்ணற்ற இசைப் பாடல்களையும் கவிதை நாடகங்களையும் படைத்துள்ளார் இவருடைய “இமயம் எங்கள் காலடியில்” என்னும் கவிதைத் தொகுப்பு நூல் தமிழக அரசின் பரிசினை பெற்று உள்ளது



அகநானூறு 

* அகம் + நான்கு + நூறு = அகநானூறு

* 13 அடிச் சிறுமையும் 31 அடி பெருமையும் கொண்ட அகப்பொருள் சார்ந்த நானூறு அகவற்பாக்களால் தொகுக்கப்பெற்ற தொகை நூலாகும்

* பல்வேறு காலங்களில் புலவர் பலரால் இயற்றப்பெற்றது

* மதுரை உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மரால் தொகுக்கப்பட்டது

* இந்நூலை தொகுப்பித்தவன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியாவான்

* இந்நூலுக்கு ‘நெடுந்தொகை’ என்னும் பெயரும் உண்டு

* அகநானூறு மூன்று பகுதிகளாக உள்ளது முதல் 120 பாட்டுகள் ‘களிற்றியானை நிரை’ அடுத்த 180 பாட்டுகள் ‘மணிமிடை பவளம்’ கடைசி 100 பாட்டுகள் ‘நித்திலக்கோவை’ எனப்படும்

* இந்நூலில்
1, 3 என ஒற்றைப்படை எண்களாக வருவன பாலை திணைப் பாடல்களாகவும்
2, 8 என வருவன குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும்
4, 14 என வருவன முல்லை திணைப் பாடல்களாகவும்
6, 16 என வருவன மருதத் திணைப் பாடல்களாகவும்
10, 20 என வருவன நெய்தல் திணைப் பாடல்களாகவும் 


“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ(று)
ஓத்த பதிற்றுபத்(து) ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோ(டு) அகம்புறம் என்(று)
இத்திறத்த எட்டுத் தொகை”

என்னும் பழம் பாடல் எட்டுத் தொகை நூல்களைச் சுட்டுகின்றது இவற்றுள் பதிற்றுபத்தும் புறநானூறும் புறப்பொருள் பற்றிய நூல்களாகும். பரிபாடல் அகப்புறப் பாடல்களை கொண்ட நூல். எஞ்சியவை அகப்பொருள் நூல்களாகும்


இந்தியத் தலைவர்களின் முக்கிய சமாதிகள்:
------------------------------------------------------------
மகாத்மா காந்தி சமாதி - ராஜ்காட்
மொரார்ஜி தேசாய் சமாதி - அபய்காட்
குல்சாரிலால் நந்தா சமாதி - நாராயண்காட்
லால்பகதூர் சாஸ்திரி சமாதி - விஜய்கா


நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்தி பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்டபின் அகிம்சை ஒன்றினால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்

No comments:

Post a Comment